News August 21, 2024

திருவாரூர் மாவட்டத்தில் முதல்வர் கோப்பை

image

திருவாரூரில் தமிழக முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் நடத்தப்படவுள்ளன. ஆக.25ஆம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும், இந்த போட்டிகளை நடத்த 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என இளைஞர் நல விளையாட்டு மேம்பாட்டு குழு அறிவித்துள்ளது.

Similar News

News March 12, 2026

திருவாரூர்: நில அளவை உதவி ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை

image

மன்னார்குடியைச் சேர்ந்த விக்டர்சாலமன் கடந்த 2014-ம் ஆண்டு பட்டா மாறுதல் செய்ய நிலஅளவை உதவி ஆய்வாளர் செல்வராஜனை அணுகிய போது அவர் ரூ.1000 லஞ்சம் கேட்டுள்ளார். விக்டர்சாலமன் லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் லஞ்சம் கொடுக்கும்போது போலீசார் செல்வராஜனை கைது செய்தனர். இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில் செல்வராஜனுக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

News March 12, 2026

திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.11) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 11, 2026

திருவாரூர்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

error: Content is protected !!