News August 21, 2024
பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

தமிழகத்தில் ஆக.24, 25 (சனி,ஞாயிறு), ஆக.26 (திங்கட்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி (பொதுவிடுமுறை) என தொடர்ந்து 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக ஆக.23 -26 வரை சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, குமரி, சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பயணிகள் www.tnstc.in மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Similar News
News March 6, 2026
கூட்டணி விஷயத்தில் ஸ்டாலின் அஞ்சினார்: TTV

NDA கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என TTV தெரிவித்துள்ளார். திமுக-காங்., கூட்டணியில் அடித்துக் கொண்டு தொகுதிப் பங்கீட்டை இறுதிசெய்தது போல் NDA கூட்டணியில் நடக்காது; சுமுகமாகவே பேச்சுவார்த்தை முடியும் எனக் கூறினார். மேலும், தவெகவுடன் காங்., சென்றுவிடுமோ என அச்சத்தில் இருந்த ஸ்டாலின் பேச்சுவார்த்தை முடிந்தபிறகு சமிக்ஞை காட்டி நிம்மதியை வெளிப்படுத்தியதாகவும் பேசினார்.
News March 6, 2026
BREAKING: இரவில் அதிமுக கூட்டணியில் இணைந்தார்

தேர்தல் நெருங்கும் நிலையில் சிறு அமைப்புகளும், சங்கங்களும் தங்களது ஆதரவு நிலைப்பாட்டை கட்சிகளிடம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அகில இந்திய சித்த வைத்தியர்கள் சங்கத்தின் நிறுவனப் பொ.செ., மருத்துவர் G. கருணாமூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் EPS-ஐ நேரில் சந்தித்து அதிமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறினர். அத்துடன், அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம் எனவும் உறுதியளித்தனர்.
News March 6, 2026
விஜய்க்காக காத்திருக்கிறாரா EPS?

20+ கட்சிகளை இணைத்து மெகா கூட்டணியை CM ஸ்டாலின் அமைத்துள்ளதால், தங்களது கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என EPS எண்ணுகிறாராம். இந்நிலையில், தனித்து போட்டியிட்டால் தேர்தல் நேரத்தில் திமுகவின் நெருக்கடியை எதிர்கொள்ள முடியாது என விஜய்க்கு அதிமுக தலைவர்கள் மூலம் EPS தூது அனுப்பியதாக கூறப்படுகிறது. எனினும், அதிமுகவுடனான கூட்டணி குறித்து விஜய் நிறைய யோசிப்பதால், அவரது முடிவுக்காக EPS காத்திருக்கிறாராம்.


