News August 21, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்

➤SC, ST இடஒதுக்கீட்டில், கிரீமிலேயர் முறை அவசியம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக இன்று நாடு தழுவிய பந்த் நடைபெற உள்ளது. ➤தமிழ்நாட்டில் ₹17,616 கோடி முதலீடுகளுக்கான துவக்க விழா இன்று நடக்க உள்ளது. ➤வங்கி கணக்கு இல்லாதவர்களும், UPI மூலம் பணம் செலுத்தும் வசதியை NPC அறிமுகம் செய்துள்ளது. ➤மருத்துவ படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு, தமிழகத்தில் இன்று தொடங்குகிறது.
Similar News
News March 23, 2026
பொன்முடிக்கு Bye Bye சொன்னதா திமுக தலைமை?

சர்ச்சை கருத்துகள் பேசி சிக்கியதால் வரும் தேர்தலில் பொன்முடிக்கு சீட் கிடைப்பது கடினமே என அரசியல் விமர்சகர்கள் கூறிவந்தனர். இந்நிலையில், இதை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது நடக்கும் வேட்பாளர் நேர்காணலில் பொன்முடி பங்கேற்கவில்லை என ஒரு தகவல் கசிந்துள்ளது. இவருக்கு பதிலாக இவரது மகன் கௌதம சிகாமணிக்கு திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பு வழங்கலாம் எனவும் கூறப்படுகிறது
News March 23, 2026
புதுச்சேரியில் தவெக – நேமக கூட்டணி.. கடைசி நேர திருப்பம்

புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் தவெக வேட்பாளர்களை அறிவித்த நிலையில், திடீர் திருப்பமாக சுயேட்சை MLA நேருவின் நேயம் மக்கள் கட்சியுடன் (நே.ம.க) கூட்டணி அமைத்துள்ளது. அக்கட்சிக்கு உருளையன்பேட்டை, தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகளையும் தவெக ஒதுக்கியுள்ளது. தவெக தனித்தே போட்டி என்ற முடிவை மாற்றிய விஜய், வேட்புமனு தாக்கலுக்கு 3 மணிநேரமே உள்ளபோது கூட்டணி அமைத்து, அக்கட்சிக்கு சீட்டும் வழங்கியுள்ளார்.
News March 23, 2026
மக்கள் பிரச்னைக்காக திமுகவிடம் பேசாத திருமா: EPS

பொம்மை CM ஸ்டாலின் நடத்திய திமுக காட்டாட்சி, சட்டம் ஒழுங்கை திருத்தியதாக தெரியவில்லை என EPS சாடியுள்ளார். நெல்லையில் பட்டியலின விவசாயி கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அவர், விளிம்புநிலை மக்களின் குரலாக தன்னை காட்டிக்கொள்ளும் திருமா, இதை பற்றி ஏன் திமுகவிடம் பேசவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சீட்டுகளுக்காக திமுகவிடம் பேசுபவர்கள், மக்கள் பிரச்னைகளையும் பேசலாமே எனவும் கேட்டுள்ளார்.


