News August 21, 2024
பன்றிகளை சுட அரசாணை – மாவட்ட வன அலுவலர்.

தமிழக வனத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோவை வனக்கல்லூரி வளாகத்தில் இன்று மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மல்லிகா, உதவி வனப்பாதுகாவலர் விஜயகுமார், வனச்சரகர்கள், விவசாயிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் பன்றிகளை சுடுவதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என்றார்.
Similar News
News July 4, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (04.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News July 4, 2025
சாலை தரம் குறித்து கலெக்டர் ஆய்வு

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அன்னூர், காரேகவுண்டன்பாளையம் ஊராட்சி பகுதியில் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தார் சாலையை கோவை கலெக்டர் பவன்குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் கோவை மாவட்ட நிர்வாக அலுவலர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News July 4, 2025
கோவை: துரித உணவு தயாரித்தல் பயிற்சி!

கோவையில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக, பானிபூரி உள்ளிட்ட துரித உணவுகள் (Fast food) தயாரித்தல் பயிற்சி விரைவில் நடைபெறவுள்ளது. இதில் பயிற்சி, சீருடை, உணவு, அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 9489043926 என்ற எண்னை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.