News August 20, 2024

வங்கிக் கணக்கு இல்லாதோரும் UPI மூலம் பணம் செலுத்தலாம்

image

வங்கி கணக்கு இல்லாதவர்களும், UPI மூலம் பணம் செலுத்தும் வசதியை NPC அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, குடும்ப உறுப்பினர்களின் UPI ஐடியை, வங்கி கணக்கு இல்லாதோர் பயன்படுத்தலாம். ஆனால், மெயின் அக்கவுண்ட் ஹோல்டர், கடன் அல்லது கிரெடிட் கார்டு வைத்திருந்தால் இந்த வசதியை பெற முடியாது. தற்போது சிலருக்கு மட்டுமே இது பொருந்தும் என்றாலும், விரைவில் அனைவரும் பயனடையும் வகையில் மாற்றம் வரும் எனக் கூறப்படுகிறது.

Similar News

News March 8, 2026

செங்கோட்டையன் திமுகவில் இணைகிறாரா? தவெக பதிலடி!

image

செங்கோட்டையனை திமுகவில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக SM-ல் பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. இது தொடர்பாக அவரது தரப்பிடம் பேசினோம், இந்த தகவல் முற்றிலும் வதந்தி என மறுப்பு தெரிவித்துள்ளனர். முன்னதாக தவெக நிகழ்ச்சிகளை KAS புறக்கணித்து வருவதாக பேசப்பட்ட விவகாரத்திற்கும் நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் பங்கேற்று மறைமுகமாக பதிலளித்துள்ளதாக தவெக தரப்பு தெரிவித்துள்ளது.

News March 8, 2026

ஜனாதிபதியை பாஜக தவறாக பயன்படுத்துகிறது: மம்தா

image

மேற்குவங்கம் சென்ற தன்னை அம்மாநில CM வரவேற்கவில்லை என <<19325512>>ஜனாதிபதி திரெளபதி முர்மு <<>>கூறியது சர்ச்சையானது. இதுகுறித்து பேசிய CM மம்தா பானர்ஜி, மத்திய பிரதேசம் & சத்தீஸ்கரில் பழங்குடியினருக்கு எதிராக அட்டூழியங்கள் நடந்தபோது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என முர்முவுக்கு கேள்வி எழுப்பினார். பாஜக தனது சொந்த ஆதாயத்திற்காக ஜனாதிபதியை அவமதித்து தவறாக பயன்படுத்துவது தவறானது எனவும் சாடியுள்ளார்.

News March 8, 2026

மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும்: அன்புமணி

image

ஜனாதிபதி திரவுபதி முர்முவை அற்ப அரசியல் காரணங்களுக்காக மேற்கு வங்க CM அவமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது என அன்புமணி சாடியுள்ளார். <<19325512>>நாட்டின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதியான முர்முவை அவமதிப்பது<<>> ஒட்டுமொத்த பெண் குலத்தையும், பழங்குடியினரையும் அவமதிக்கும் செயல்; இதற்காக ஜனாதிபதியிடமும், சந்தாலி பழங்குடியினரிடமும் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!