News August 20, 2024
கேரளாவில் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து

கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் வார கொண்டாட்டங்களை ரத்து செய்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் 231 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், 300க்கும் மேற்பட்டோரை காணவில்லை என கூறப்படுகிறது. இந்த சோக நிகழ்வு காரணமாக ஓணம் வார கொண்டாட்டங்களை முதல்வர் ரத்து செய்துள்ளார்.
Similar News
News March 18, 2026
அஇபுதமமுக விருப்பமனு.. அப்செட்டில் சசிகலா?

சமீபத்தில் அஇபுதமமுக கட்சியில் இணைந்த சசிகலா, இன்று முதல் தனது இல்லத்தில் விருப்பமனு வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், மிகவும் சொற்ப அளவிலான ஆதரவாளர்களே விருப்ப மனுவை வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. எளிதில் விருப்பமனு கிடைத்ததால், அன்னபோஸ்டாக சீட் கிடைக்குமென விருப்ப மனு பெற்றவர்கள் நம்புகின்றனராம். இதனால், சசிகலா அப்செட்டில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்ட ரஷ்ய எண்ணெய் கப்பல்கள்

இந்தியா சமீபத்தில் ரஷ்ய எண்ணெய் கொள்முதலை இரட்டிப்பாக்கியுள்ளது. சீனாவுக்கு சென்று கொண்டிருந்த ‘அக்வா டைட்டன்’ எண்ணெய் கப்பல், மார்ச் 21 அன்று கர்நாடகாவின் புதிய மங்களூரு துறைமுகத்தை வந்தடைய உள்ளது. இந்தியா கடந்த 1 வாரத்தில் ரஷ்யாவிடமிருந்து 30 மில்லியன் பேரல் எண்ணெயை, ஒரு பேரல் $98-க்கு வாங்கியுள்ளது. மொத்தம் 7 கப்பல்களை ரஷ்யா சீனாவிலிருந்து இந்தியாவுக்குத் திருப்பிவிட்டுள்ளது.