News August 20, 2024
தங்கம் வென்ற மாணவியை பாராட்டிய ஆட்சியர்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேசிய அளவிலான தேக்வாண்டோ விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்ற கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.நக் ஷத்ராவை இன்று ஆட்சியர் நேரில் அழைத்து சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். தொடர்ந்து ஆட்சியர் பிரசாந்த் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 16, 2026
கள்ளக்குறிச்சி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News March 16, 2026
கள்ளக்குறிச்சி: மாட்டு கொட்டகை மானியம் பெறுவது எப்படி?

1) கள்ளக்குறிச்சி மக்களே.., தமிழக அரசின் மாட்டுக் கொட்டகை மானியத் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியமாக பெறலாம். 2) இதில் விருப்பமுள்ளவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். 3)அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மானியத்துடன் கொட்டகையும் உங்களுக்கு அமைத்துத் தரப்படும். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News March 16, 2026
கள்ளக்குறிச்சி: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.


