News August 20, 2024
பேருந்து முனைய கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு

திருவள்ளூர் நகராட்சி வேடங்கிநல்லூரில் ரூ. 33 கோடியில் அமைய உள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் கட்டுமான பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் கலந்தாய்வு மேற்கொண்டார். சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று (20/08/24) நடைபெற்ற இந்த கலந்தாய்வில், துறை சார்ந்த அதிகாரிகள் பணிகள் குறித்த முழு விவரங்களை தெளிவாக விளக்கினர்.
Similar News
News March 12, 2026
திருவள்ளூர்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

திருவள்ளூர் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!
News March 12, 2026
திருவள்ளூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 12, 2026
திருவள்ளூரில் சிலிண்டர் புக் செய்ய சிரமமா?

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!


