News August 20, 2024
திருவாரூரில் பெண் கொலை – 2 பேர் கைது

திருவாரூர் அருகே இலவங்கார்குடி பகுதியில் நேற்று இரவு பிரபாவதி (40) என்ற பெண்மணி கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே ஊரில் கேபிள் டிவி நடத்தி வரும் சந்தோஷ் (25) அவரது சகோதரர் சஞ்சய் (24) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர், இருவரிடம் இருந்து பிரபாவதியின் செல்போன் மற்றும் தாலி செயின் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 14, 2026
திருவாரூர் கோர்ட்டு அதிரடி!

குடவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ஜீவரேகா. இந்த பள்ளியில் +2 படித்த மாணவி ஒருவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு கலியமூர்த்தி என்பவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இவ்வழக்கின் விசாரணை திருவாரூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், மாணவி வயது குறித்து சாட்சியம் அளிக்க 18 முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாத ஜீவரேகாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
News March 14, 2026
பாய்ந்த குண்டாஸ்: திருவாரூர் மாவட்ட எஸ்.பி அதிரடி!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுதலில் ஈடுபட்ட பாலசுந்தரம், ராஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் பரிந்துரையின் பேரில், இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
News March 14, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 13) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


