News August 20, 2024

பாஜகவுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும்? கனிமொழி

image

தமிழக மக்களுக்கு எதுவுமே செய்யாத பாஜகவுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும் என கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவுடனான திமுகவின் உறவில் எந்த மாற்றமும் இல்லை என்ற கூறிய அவர், மெட்ரோ உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய பாஜக அரசு இதுவரை நிதி ஒதுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார். அனைவரிடம் அன்பாக பழகும் முதல்வர் ஸ்டாலின், உரிமைக்காக கலைஞர் போல் போராடக் கூடியவர் என்றும் தெரிவித்தார்.

Similar News

News August 15, 2025

தி.மலை: EPFO நிறுவனத்தில் ரூ.45,000க்கு மேல் சம்பளத்தில் வேலை

image

தி.மலை மத்திய அரசு இப்போது EPFO நிறுவனத்தில் அமலாக்க அதிகாரி போன்ற பொறுப்புகளுக்கு காலியிடங்கள் அறிவித்துள்ளது, இந்த பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி அல்லது Companies Act, Indian Labor law போன்ற படிப்புகளில் பாலிடெக்னிக் படித்திருந்தால் போதுமானது. எழுத்து தேர்வும் உண்டு, இந்த பணிக்கு 45,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட்-18குள் இந்த <>லிங்கில் சென்று <<>>விண்ணப்பிக்கலாம்.

News August 15, 2025

இசை புயலின் 33 ஆண்டுகாலப் பயணம்

image

சினிமாவில் 33 ஆண்டுகால பயணத்தை ஏ.ஆர்.ரஹ்மான் நிறைவு செய்துள்ளார். 1992 ஆக., 15-ம் தேதி ‘ரோஜா’ படம் மூலம் சினிமாவில் அவர் அறிமுகமானார். இளையராஜா எனும் ஜாம்பவான் கோலோச்சிக் கொண்டிருந்த நேரத்தில், தனது தனித்துவமான இசையின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். ஆஸ்கர் விருதில் தொடங்கி விருதுகள் வரை வென்றவர். பல மொழிகளில் இசையமைத்தாலும் தன்னை தமிழன் என்று சொல்வதில் பெருமை கொள்பவர். பயணம் தொடரட்டும் இசை நாயகனே.

News August 15, 2025

இந்தியாவை வாழ்த்திய அமெரிக்கா, ரஷ்யா

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஷ்ய அதிபர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அறிவியல், பொருளாதாரம் என பல துறைகளில் சாதித்து உலகளவில் மதிப்புமிக்க நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும், இந்தியா – ரஷ்யா இடையேயான உறவு மேலும் மேம்பட விரும்புவதாகவும் அவர் வாழ்த்தியுள்ளார். அதேபோல், உலகின் மிகப்பெரிய பெரிய ஜனநாயக நாட்டுடனான தங்களது உறவு மதிப்புமிக்கது என அமெரிக்காவும் வாழ்த்து தெரிவித்துள்ளது.

error: Content is protected !!