News August 20, 2024
கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்யலாம்: ஐகோர்ட்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆறு கால பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபை மீது ஏறி வழிபடலாம். இதை யாரும் தடுக்க கூடாது. இதை மீறினால், உரிய தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தி, ஆனி திருமஞ்சன விழாவில் கனகசபையில் பக்தர்கள் தரிக்க அனுமதி கோரி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது.
Similar News
News March 21, 2026
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானது

புதுச்சேரியில் NDA கூட்டணியில் பாஜகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 9 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மண்ணாடிபட்டு – நமசிவாயம், ஊசுடு – தீப்பாய்ந்தான், முதலியார் பேட்டை – ஜான்குமார், காலப்பேட்டை – கல்யாணசுந்தரம், ராஜ்பவன் -ராமலிங்கம், மணவேளி – செல்வம், திருநள்ளாறு- ராஜசேகரன், மாஹே – தினேஷன், T.R பட்டினம் – மீனாட்சி சுந்தரம் போட்டியிடுகின்றனர்.
News March 21, 2026
QR code-ஐ கண்டுபிடித்தவரை பற்றி தெரியுமா..?

டிஜிட்டல் புரட்சிக்கு காரணமான QR code-ஐ கண்டுபிடித்தவர் ஜப்பானின் மாசாஹிரோ ஹரா. கார் கம்பெனியில் வேலை பார்த்த இவர், கார் Spare parts தகவல்களை கூடுதலாக, சேமிக்க வடிவமைத்ததே QR code. ஜப்பானின் ‘Go’ என்ற போர்ட் கேமின் டிசைன்தான் இவருக்கு inspiration. 1994-ல் QR code-ஐ வடிவமைத்த ஹரா, தற்போது உலகம் முழுக்க தனது கண்டுபிடிப்பு பயன்படுத்தப்பட்டாலும், அதற்காக காப்புரிமையோ, பணமோ கேட்டதில்லையாம்.
News March 21, 2026
தங்கம் விலை 10 நாள்களில் சவரனுக்கு ₹10,000 குறைந்தது

கடந்த 10 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹10,800 குறைந்து நகைப் பிரியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று 1 சவரன் ₹1,08,960-க்கு விற்பனையாகும் நிலையில், வரும் நாள்களில் மேலும் குறையும் என நிபுணர்கள் கூறுகின்றனர். போர் பதற்றம் மற்றும் அமெரிக்க Fed Rate நிலைத்தன்மை காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.


