News August 20, 2024
வேலூரில் மழை பெய்ய வாய்ப்பு

வேலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வெளியே செல்லும் பொதுமக்கள், குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யுமா?
Similar News
News August 7, 2025
வேலூரில் சைபர் குற்ற வழக்குகளில் ரூ.45.83 லட்சம் மீட்பு

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A. மயில்வாகனன் முன்னிலையில், நேற்று (ஆக.06) சைபர் கிரைம் காவல் நிலையத்தில், கடந்த ஜூலை மாதம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட 19 வழக்குகளின் தொடர்பாக ரூ.45,83,671 பணம் மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை நிகழ்வில் கலந்துகொண்டார்.
News August 7, 2025
வேலூர் மக்களே சான்றிதழ் தொலைந்துவிட்டதா?

வேலூர் மக்களே, வருவாய்துறையின் கீழ் பெறப்படும் சாதி சான்றிதழ், பிறப்பு, இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்துவிட்டால் தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் செல்போனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த <
News August 7, 2025
என்னென்ன சான்றிதழ்களை பெறலாம்

வருமான சான்று, சாதி சான்று, இருப்பிடச்சான்று, கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு-குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் மற்றும் வேலையில்லாதோர் சான்றிதழ் ஆகியவற்றை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க