News August 20, 2024
புதுவையில் அக்.29ல் தொடக்கம்

இந்திய தேர்தல் ஆணையம், 18 வயது பூர்த்தியடைந்த நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, புதுவையில் இறந்த மற்றும் வேறு மாநிலத்திற்கு குடிபெயர்ந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குதல், வாக்காளரின் முகவரி, புகைப்படம், போன்றவை திருத்தம் செய்தல், ஆகிய பணிகள் வரும் அக்., 29ம் தேதி முதல் துவங்க உள்ளதாக கலெக்டர் குலோத்துங்கன் நேற்று அறிவித்துள்ளார்.
Similar News
News March 12, 2026
புதுச்சேரி: சிறப்பு சார்பு ஆய்வாளர் மீது தாக்குதல்!

புதுச்சேரி போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றும் வேணுகோபால் (53), மணவெளி விக்டோரியா நகரில் வசித்து வருகிறார். அவரது வீட்டின் முன் லாரி சென்றபோது சிமெண்ட் தரை சேதமடைந்துள்ளது. இதுகுறித்து லாரி ஓட்டுநர் முருகனை வேணுகோபால் தட்டிக்கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முருகன் மற்றும் அவரது சகோதரர் சுப்பிரமணியன் இணைந்து வேணுகோபாலை தாக்கியதாக கூறப்படுகிறது.
News March 12, 2026
புதுச்சேரி: பொய்யான தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை

புதுச்சேரி மாநிலத்தில் வீட்டு உபயோக எல்.பி.ஜி. சிலிண்டர் பற்றாக்குறை இருப்பதாக பொய்யான மற்றும் தவறான தகவல்களை பரப்பும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் வழக்கம்போல நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.