News August 20, 2024
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் ஆகஸ்ட் 23-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய வளாகத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் www.tnprivatejobs.tn Gov.in என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 18, 2026
தி.மலை: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

தி.மலை மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!
News March 18, 2026
தி.மலை: தேர்தல் வந்தாச்சு – CHECK பண்ணுங்க!

தி.மலை மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!
News March 18, 2026
வேட்டவலம் பகுதியில் 53 பித்தளை சிலைகள் பறிமுதல்

கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்றத் தொகுதியில், இன்று (18.03.2026) நிலை கண்காணிப்புக்குழு (SST-1) வாகன சோதனை மேற்கொண்டது. வேட்டவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேளானந்தல் கூட்ரோட்டில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த உமன் பாரூக் என்பவர் காரில் ஆவணமின்றி கொண்டு சென்ற 53 பித்தளை சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தாமஸ் தலைமையிலான குழுவில் போலீசார் அனிதா, தெய்வ மூர்த்தி உள்ளிட்டோர் இதனை பறிமுதல் செய்தனர்.


