News August 20, 2024

டாடாவை வீழ்த்த சீனாவுடன் கைகோர்த்த அம்பானி!

image

இந்தியாவைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர்களான ரத்தன் டாடாவும், முகேஷ் அம்பானியும் அண்மைக்காலமாக துணி விற்பனையில் நேரடியாக மோதி வருகின்றனர். இதில் ரிலையன்ஸ் துணி விற்பனை நிறுவனத்தை விட, டாடாவின் Zudio நிறுவனம் பல மடங்கு லாபத்தில் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து, சீனாவின் Shein என்ற ஆன்லைன் துணி நிறுவனத்துடன் கை கோர்த்துள்ள அம்பானி, டாடாவை வீழ்த்தும் முனைப்பில் இறங்கியுள்ளார்.

Similar News

News March 19, 2026

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வர தடை போட்ட ஸ்டாலின்?

image

ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோரை தொடர்ந்து அதிமுகவில் சீட் கிடைக்காதோர், மீண்டும் கட்சியில் இணைய முடியாதவர்கள் என பலரும் திமுகவில் இணைய காத்திருக்கிறார்களாம். ஆனால், அதிமுகவை பலம் இழக்க செய்வதன் மூலம் தமிழகத்தில் பாஜக வலுவடைந்து விடும் என்ற கருத்து திமுக மேலிடத்துக்கு சென்றுள்ளது. இதனையடுத்து, அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வர நினைப்போருக்கு தற்போதைக்கு ஸ்டாலின் தடை போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News March 19, 2026

BREAKING: அதிமுக கூட்டணியில் இணைந்தார்

image

திமுக கூட்டணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுகவும் கூட்டணியை பலப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தலைவர் G.B.பச்சையப்பன், EPS-ஐ சந்தித்து 2026 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைவதாக அறிவித்துள்ளார். சிகப்பு, மஞ்சள், சிகப்பு நிறத்திலான கொடியை(தவெக) விஜய் பயன்படுத்தக்கூடாது என வழக்குத் தொடுத்தது பச்சையப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 19, 2026

திமுக வைக்கும் டிமாண்ட்.. முரண்டு பிடிக்கும் விசிக!

image

திமுக கூட்டணியில் 8 தொகுதிகளை ஒதுக்க விசிக, அழுத்தம் கொடுத்து வருகிறது. அதில், குறைந்தது 3 பொதுத் தொகுதிகள் வேண்டும் என திருமாவளவன் அழுத்தமாக கேட்டுள்ளாராம். ஆனால், திமுக தலைமையோ 6 சீட்டுகள்; அதில் 1 பொதுத் தொகுதி, 1 தனித் தொகுதியில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட வேண்டும் என சொன்னதாக தெரிகிறது. அதனை மறுத்த திருமாவளவன் ‘பானை’ சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.

error: Content is protected !!