News August 20, 2024
14 மாவட்டங்களில் கனமழை

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழையும், சென்னையில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும், தென்மேற்கு பருவமழை 85% கூடுதலாக பெய்துள்ளதாகவும் கூறியுள்ளது.
Similar News
News March 20, 2026
கூட்டணியில் இணைந்தார் ராமதாஸ்.. அரசியல் திருப்பம்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து களம் காண இருப்பதாக ராமதாஸ் – சசிகலா இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர். தைலாபுரத்தில் நடைபெற்ற சந்திப்பை அடுத்து, கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் ஒன்றாக தேர்தலை சந்திக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தங்கள் கூட்டணி 234 தொகுதிகளிலும் போட்டியிட இருப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
News March 20, 2026
16 போர் விமானங்களை இழந்த அமெரிக்கா

ஈரானுடனான போரில் அமெரிக்கா பின்னடைவை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 16 போர் விமானங்களை அந்நாடு இழந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இவற்றில் 10 MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானங்கள், 3 F-15 ரக விமானங்கள் மற்றும் ஒரு KC-135 எரிபொருள் நிரப்பும் விமானம் அடங்கும். இவற்றில் சில விமானங்கள் ஈரானால் வீழ்த்தப்பட்டவை. மற்றவை நட்பு நாடுகளின் தாக்குதலுக்கு(Friendly fire) உள்ளானவை.
News March 20, 2026
தலையில் காயம்.. மிகவும் முக்கியமான ‘கோல்டன் ஹவர்’

தலையில் அடிபட்டால் ஒரு மணி நேரத்துக்குள் சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம். இதனால் தான் இந்த நேரத்தை டாக்டர்கள் ‘கோல்டன் ஹவர்’ என்று குறிப்பிடுகின்றனர். இந்த ஒரு மணி நேரத்தில், பாதிக்கப்பட்டவரை விரைவாக ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்ல வேண்டும். ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதுடன், நோயாளியின் கழுத்தை அசைக்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். உலக தலை காயம் விழிப்புணர்வு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.


