News August 20, 2024
நான் அதிபரானால் எலான் மஸ்க் அமைச்சர்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்புக்கு உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க், வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதுபற்றி பேசிய டிரம்ப், “மஸ்க் மிகச்சிறந்த அறிவாளி. நான் அதிபரானால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பேன்” எனக் கூறினார். இதற்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், “அமைச்சராகி சேவை செய்ய தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 21, 2026
மனித மிருகங்கள் சுதந்திரமாக நடமாட்டம்: அன்புமணி

TN-ன் சாபக்கேடு என்றால் அது திமுகவின் ஆட்சி என அன்புமணி விமர்சித்துள்ளார். தூத்துக்குடி, கோவை, மதுராந்தகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு போலீசாரின் மெத்தனமே காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சியில் மனித மிருகங்கள் சுதந்திரமாக நடமாடும் போது, மக்கள் அஞ்சி நடமாடும் சூழல் இருந்தால், இதுநாடா அல்லது காடா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 21, 2026
MS தோனி பொன்மொழிகள்

*முடிவை விட செயல்முறை தான் முக்கியமானது. நீங்கள் சரியான பாதையில் சென்றால், முடிவு தானாகவே தேடி வரும். *தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள், ஆனால் அந்தத் தோல்வியையே சுமந்துகொண்டு திரியாதீர்கள்.*வெற்றி என்பது தற்காலிகமானது, ஆனால் நீங்கள் வாழ்க்கையை அணுகும் விதம் எப்போதும் நிலைத்து நிற்கும். *அமைதியாக இருப்பது பலவீனம் அல்ல, அது மிகப்பெரிய பலம். பதற்றமான சூழலில் நிதானமே வெற்றிக்கான வழி.
News March 21, 2026
ஆப்கனுக்கு மருத்து உதவியை வழங்கிய இந்தியா

2.5 டன் மருத்துவ உதவி பொருட்களை ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பியுள்ளது. சமீபத்தில் காபூலில் உள்ள போதை மறுவாழ்வு மையம் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 400 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஏராளமானோர் காயமும் அடைந்த நிலையில் அவர்களுக்காக இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது. தொடர்ந்து ஆப்கன் மக்களுக்கு தேவையான உதவியை செய்ய தயாராக உள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.


