News August 20, 2024
உனக்கு ஒரு கேடு வர மாட்டேங்குதே.. கொசு டே

மலேரியா கொசு மூலம் பரவுவதை கண்டுபிடித்த ரொனால்டு ரோஸின் நினைவாக, ஆக.20 சர்வதேச கொசு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. டைனோசர் காலத்திலிருந்து வாழும் கொசுக்களை பற்றிய சில தகவல்கள். 1. கொசுக்கள் தனது உடலை விட 3 மடங்கு அதிகமான ரத்தம் குடிக்கும். 2. உலகிலேயே ஆபத்தான உயிரினமாக கொசு உள்ளது. 3. 75 அடிக்கு அப்பால் உள்ள வாசனையையும் கொசு நுகரும். 4. 3,500 வகையான கொசுக்கள் உள்ளன.
Similar News
News March 19, 2026
அழைப்பு VS வதந்தி

தவெக கூட்டணி முடிவு குறித்த <<19418800>>விஜய்யின் பேச்சுக்கு<<>> ஆதரவு, எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. வதந்தி பரப்பினர், மதவாத சக்திகளோடு கூட்டணி இல்லை என சொன்ன விஜய், அதனைக் கூற ஒரு வாரம் நேரம் எடுத்துக் கொண்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி 90 தொகுதிகள், 2.5 ஆண்டுகள் CM பதவி ஆஃபரை கொடுத்தனர் என <<19412409>>ஆதவ் அர்ஜுனா<<>> சொன்னது விஜய்க்கு தெரியாமல் அவர் நடத்திய கூட்டணி பேச்சா என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
News March 19, 2026
அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வர தடை போட்ட ஸ்டாலின்?

ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோரை தொடர்ந்து அதிமுகவில் சீட் கிடைக்காதோர், மீண்டும் கட்சியில் இணைய முடியாதவர்கள் என பலரும் திமுகவில் இணைய காத்திருக்கிறார்களாம். ஆனால், அதிமுகவை பலம் இழக்க செய்வதன் மூலம் தமிழகத்தில் பாஜக வலுவடைந்து விடும் என்ற கருத்து திமுக மேலிடத்துக்கு சென்றுள்ளது. இதனையடுத்து, அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வர நினைப்போருக்கு தற்போதைக்கு ஸ்டாலின் தடை போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News March 19, 2026
BREAKING: அதிமுக கூட்டணியில் இணைந்தார்

திமுக கூட்டணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுகவும் கூட்டணியை பலப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தலைவர் G.B.பச்சையப்பன், EPS-ஐ சந்தித்து 2026 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைவதாக அறிவித்துள்ளார். சிகப்பு, மஞ்சள், சிகப்பு நிறத்திலான கொடியை(தவெக) விஜய் பயன்படுத்தக்கூடாது என வழக்குத் தொடுத்தது பச்சையப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.


