News August 20, 2024
துக்ளக் ‘சோ’ மனைவி காலமானார்

துக்ளக் சோவின் மனைவி செளந்தரா ராமசாமி (84) காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்ததாகவும், உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சோ மறைவிற்கு பிறகு, துக்ளக் இதழ் போன்றவற்றை கவனித்து வந்தார்.
Similar News
News March 23, 2026
வெள்ளகோவில் அருகே விபத்து: ஒருவர் உயிரிழப்பு

மொடக்குறிச்சியைச் சேர்ந்த ராகுல் (29) மற்றும் அவரது உறவினர் தீபக் (27) ஆகியோர் இன்று கொடைக்கானல் சென்றுவிட்டு பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். வெள்ளகோவில், அய்யம்பாளையம் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக பைக் சாலையோர புளியமரத்தில் மோதியது. இதில் ராகுல் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 23, 2026
தருமபுரியில் வெடித்தது மக்கள் போராட்டம்

கே.ஈச்சம்பாடி அணையிலிருந்து மொரப்பூர், அரூர் பகுதிகளிலுள்ள 60 வறண்ட ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, அப்பகுதி விவசாயிகள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். நீண்ட போராட்டங்களுக்கு பிறகும் கோரிக்கைகள் நிறைவேறாததால், தருமபுரி மாவட்டத்தில் இத்தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல்வாதிகள் மீதான அதிருப்தியில் மக்கள் இம்முடிவை எடுத்துள்ளனர்.