News August 20, 2024
வேலூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் குவிந்த மனுக்கள்

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் கடந்த ஜூலை 11ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது. இந்த முகாம்களில் மொத்தம் 33,365 மனுக்கள் வந்துள்ளன. இதில் உடனடியாக 4,225 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 28,540 மனுக்கள் நிலுவையில் உள்ளன. 56 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. 600 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 18, 2026
வேலூர்: தேர்தல் வந்தாச்சு – CHECK பண்ணுங்க!

வேலூர் மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!
News March 18, 2026
வேலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

சட்டமன்ற பொதுத்தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்களை ஈடுபடுத்தப்படவுள்ளனர். வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த 65 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள இளநிலை படை அலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகம் அல்லது 0416-2977432 என்ற தொலைபேசி எண் மூலமாக தெரிவிக்குமாறு கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
News March 18, 2026
வேலூர்: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.


