News August 20, 2024
விருதுநகர் தபால்துறை வேலைக்கான Merit List

விருதுநகர் தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் MERIT பட்டியல் வெளியாகியிருக்கிறது. விருதுநகர் தபால் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளாமானோர் விண்ணப்பித்திருந்தனர். <
Similar News
News March 8, 2026
கூமாப்பட்டியில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி

வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாப்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூமாப்பட்டி கிளை சார்பில் நாளை இப்திகார் நோன்பு நிகழ்ச்சியை நடைபெற உள்ளது. இதில், தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்எல்ஏ ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி மற்றும் கட்சியினர் கலந்து கொள்ள உள்ளனர்.
News March 8, 2026
விருதுநகர்: 6ம் வகுப்பு சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை

ஏழாயிரம் பண்ணையை சேர்ந்தவர் கரிக்கோல் ராஜ்(68). இவர் 6-ம் வகுப்பு படிக்கும் இரு சிறுவர்களை அறைக்கு அழைத்து சென்று அவர்கள் முன்பு நிர்வாணமாக நின்றதோடு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுவர்கள் அவர்களின் தந்தையிடம் கூறினர். இதனை தொடர்ந்து ஏழாயிரம்பண்ணை போலீசார் முதியவரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News March 8, 2026
விருதுநகர்: பட்டாசு தயாரித்தவர் கைது

ஏழாயிரம்பண்ணை பகுதியில் போலீசார் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குறித்து சோதனை நடத்தினர். அப்போது கன்னக்குடும்பன்பட்டியை சேர்ந்த அறிவழகன்(55) முத்தாண்டியாபுரம் ரேஷன் கடை அருகில் தகர செட்டில் பேன்சி ரக பட்டாசுகLai தயாரித்துள்ளார். ரோந்து சென்ற போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்த நிலையில் ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


