News August 20, 2024
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்!

மத்திய அரசு ஊழியர்கள் & ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி (DA), அகவிலை நிவாரணம் (DR) 2ஆவது முறையாக உயர்த்தப்படவுள்ளது. 7ஆவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, செப்.,முதல் வாரத்தில் இந்த உயர்வை மத்திய அரசு அறிவிக்குமெனக் கூறப்படுகிறது. DA 3% வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், கோவிட் காலத்தில், 18 மாதங்கள் நிறுத்தப்பட்ட நிலுவைத் தொகையை அரசு அளிக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 19, 2026
அதிமுக கூட்டணிக்கு நோ… விஜய்க்கு என்ன பலன்?

அதிமுக கூட்டணிக்கு விஜய் No சொன்னதால் இதெல்லாம் சாதகமாம்: *40 சீட்டுகள் வென்று து.முதல்வர் ஆனாலும், நீண்டகால நோக்கில் கட்சியை வளர்க்க அது உதவாது *கொள்கை எதிரி பாஜக, ஊழல் கட்சி அதிமுக என மேடையில் பேசியதை உறுதிப்படுத்தும் *தனித்து சீட்களை வெல்ல முடியாவிட்டாலும் கணிசமான வாக்குகள் பெறலாம் *தவெகவின் பலத்தை காட்டிவிட்டால், அடுத்தமுறை கட்சிகளை கூட்டணிக்கு கொண்டு வருவது ஈஸி. நீங்கள் என்ன சொல்றீங்க?
News March 19, 2026
தமிழக அதிகாரிகள் மாற்றம்: Ex கவர்னர் ரவி காரணமா?

முக்கிய அதிகாரிகளை ECI அவ்வப்போது பணியிடமாற்றம் செய்து வருகிறது. இதன் பின்னணியில் Ex TN கவர்னர் RN ரவி கொடுத்த லிஸ்ட் உள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 3 மாதங்களாக ஆய்வு செய்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளின் பட்டியலை டெல்லி தலைமையிடம் அவர் கொடுத்துள்ளாராம். அதிகாரிகள் மாற்றம் தொடர்பாக நயினார், அண்ணாமலை போன்றவர்களிடமும் ஆலோசிக்கும் மத்திய உள்துறை அதன்படி ECI-க்கு பரிந்துரைக்கிறதாம்.
News March 19, 2026
ஜன நாயகன் படம் ரிலீஸ்.. வெளியான புது அப்டேட்

‘ஜன நாயகன்’ படம் ரிலீஸ் குறித்து தலைமை தேர்தல் ஆணையம்தான் விளக்கமளிக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக படத்தை வெளியிட தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை பெற வேண்டுமா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு ‘ஜன நாயகன்’ படத்தை சென்சார் போர்டு மறு ஆய்வு செய்துள்ளது. தற்போது தேர்தல் ஆணையத்தின் ஒப்பதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


