News August 20, 2024

தபால் துறையில் உத்தேச பட்டியல் வெளியீடு

image

நாடு முழுவதும் தபால் துறையில் 44,228 காலிப்பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் MERIT பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய 236 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியானது. முழு விவரங்களை https://indiapostgdsonline.gov.in/# என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Similar News

News March 7, 2026

தஞ்சாவூர்: 34 பேரிடம் ரூ.1.50 கோடி மோசடி!

image

தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் கும்பகோணம் பகுதிகளில், சமூக வலைதளங்கள் மூலம் ஆன்லைன் டிரேடிங் மற்றும் பகுதிநேர வேலை என ஆசை காட்டி 34 பேரிடம் சுமார் ரூ.1.50 கோடி மோசடி நடந்துள்ளது. இதில் ஆசிரியர்கள், விவசாயிகள், தனியார் ஊழியர்கள் எனப் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் புகாரை அடுத்து, தஞ்சாவூர் சைபர் க்ரைம் காவல்துறையினர் 34 வழக்குகள் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 7, 2026

தஞ்சாவூர் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்!

image

தஞ்சாவூர் கொடிமரத்து மூலை பகுதியில் உயர்மட்ட‌ பாலம் கட்டும் பணிகள்‌ நடைபெற‌ உள்ளதால், வரும் மார்ச் 9-ம் தேதி முதல், கும்பகோணம் – திருவையாறில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கீழவாசல் வழியாக செல்ல வேண்டும். இதேபோல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் மேலவீதி, பழைய திருவையாறு சாலை வழியாக செல்ல வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News March 7, 2026

தஞ்சை: விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

image

அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் கரும்பு அரவை நடைபெற்று வருகிறது. நடப்பு அரவைப்பருவத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பரப்பிலிருந்து 1,45,000 மெ.டன்கள் அரவை செய்ய திட்டமிடப்பட்டு 4-ம் தேதி வரை 1,11,368 மெ.டன்கள் அரவை செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆலை அரவை 12-ம் தேதி நிறைவு செய்ய உள்ளதால் ஆலைக்கு பதிவு செய்து, விவசாயிகள் கரும்புகளை விரைந்து அனுப்ப ஆட்சியர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!