News August 20, 2024
ஈரோடு கலெக்டர் அறிவிப்பு

சத்தியமங்கலம் தாலுகா அரசூர் அடுத்த குயவன்குழி பகுதியில் ஆகஸ்ட் 21ஆம் தேதி (புதன்கிழமை) மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கை மனுக்களை, முகாமில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அளித்து பயன்பெறலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார். இந்த மனுநீதி நாள் முகாமுக்கு கலெக்டர் ராஜ கோபால் சுன்காரா தலைமை வகிக்கிறார்.
Similar News
News March 16, 2026
BREAKING: ஈரோடு மாவட்ட எஸ்பி மாற்றம்!

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்தில் 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அ. சுஜாதா மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக டி.வி. கிரண் ஸ்ருதி புதிய எஸ்.பி.-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
News March 16, 2026
ஈரோடு: தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News March 16, 2026
ஈரோடு: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், ஈரோடு மாவட்ட மக்கள் 04242210898 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!


