News August 20, 2024

மருத்துவ தரவரிசை பட்டியலில் 9ஆம் இடம் பிடித்த மாணவி

image

இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தர வரிசை பட்டியல் நேற்று வெளியானது. இந்த பட்டியலில் செங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி மோகனா நீட் தேர்வில் 658 மதிப்பெண் பெற்று 7.5 இட ஒதுக்கீட்டில் மருத்துவ தரவரிசை பட்டியலில் 9ஆம் இடம் பிடித்துள்ளார். செய்யாறு அடுத்த கரிவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இவர் அரசு பள்ளியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 13, 2026

தி.மலையில் இரவு ரோந்து – காவல்துறை அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பேணும் வகையில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை சிறப்பு இரவு ரோந்து பணிக்காக காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர நிலை ஏற்பட்டால் பொதுமக்கள் தங்களது உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் அல்லது உடனடி காவல் உதவிக்காக 100 என்ற அவசர எண் மூலம் தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News March 12, 2026

தி.மலை: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

திருவண்ணாமலை மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News March 12, 2026

தி.மலை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

திருவண்ணாமலை மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!