News August 20, 2024
படிக்கும்போது டீச்சரை லவ் பண்ணிருக்கேன்: அமீர்

பள்ளியில் படிக்கும்போது, தான் டீச்சரை லவ் பண்ணியதாக, இயக்குநர் அமீர் கூறியுள்ளார். மாரி செல்வராஜின் வாழை திரைப்பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அமீர், “இந்த படத்தில் டீச்சரை மாணவன் லவ் பண்ணுவது போல காட்டப்படுகிறது. நானும் படிக்கும்போது ஒரு டீச்சரை லவ் பண்ணேன். அவங்க சேலை முந்தானையை பிடிச்சு பார்ப்பேன். ஒருவாட்டி இதை பார்த்த இன்னொரு டீச்சர் என்னை முட்டிப்போட சொல்லிட்டாங்க” என நினைவுகூர்ந்தார்.
Similar News
News March 20, 2026
‘ஜன நாயகன்’ ரிலீஸ்.. தேர்தல் அதிகாரியின் அப்டேட்!

ஆட்சேபனை காட்சிகள் அதிகம் இருந்தால் ‘ஜன நாயகன்’ வெளியீட்டை ஒத்திவைக்க முடியும் என Ex தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சுவாமி தெரிவித்துள்ளார். அவசியப்பட்டால் பட காட்சிகளை நீக்கலாம் என்று கூறிய அவர், படத்தில் உள்ள கருத்தை பொறுத்தே அதனை முடிவு செய்வார்கள் என தெரிவித்தார். படத்தின் மறு ஆய்வு முடிவடைந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு படம் அனுப்பப்பட்டுள்ளது.
News March 20, 2026
மகளிர் உரிமை தொகை ₹1,500.. தேர்தல் வாக்குறுதி அளித்தார்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலையொட்டி, 10 முக்கிய வாக்குறுதிகளை மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். ₹1,000-ஆக உள்ள மகளிர் உரிமைத் தொகை பொதுப்பிரிவு மகளிருக்கு ₹1,500 ஆகவும், SC/ST பிரிவு மகளிருக்கு ₹1,700 ஆகவும் உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார். அதேபோல, வேலைதேடும் இளைஞர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ₹1,500 தொடர்ந்து வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
News March 20, 2026
‘நான் சாகப் போகிறேன்’

‘நான் எங்கேயோ, யார் கூடயோ போறேன்னு சொல்ற. நான் உனக்கு மனசால கூட துரோகம் நினைக்கல. ஆனா, நீ என்ன நம்பல. நான் ஒரு நல்ல முடிவ எடுத்து இருக்கேன். கடைசி வர உன்கூட தான் இருப்பேன். I LOVE YOU’. தாம்பரம் அருகே இளம்பெண் அபிநயா(30) தனது கணவன் அருண் குமாருக்கு கடைசியாக அனுப்பிய மெசெஜ் இது. தனது நடத்தையில் கணவன் சந்தேகப்பட்டதால், திருமணமான மூன்றே மாதத்தில் அபிநயா தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகம்.


