News August 20, 2024

திருப்பத்தூர் எம்எல்ஏ-வை வழக்கில் சேர்க்க உத்தரவு

image

திருப்பத்தூரை சேர்ந்த விஜயலட்சுமி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நில அபகரிப்பு மனுவில் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லத்தம்பி தலையீடு இருந்ததால் அவர்களது நிலம் பறிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் திருப்பத்தூர் எம்எல்ஏவு-க்கு எதிராக தீவிரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதால், அவரையும் இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News July 9, 2025

இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

News July 8, 2025

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி ஸ்ரேயா குப்தா அறிவுறுத்தலின்படி திருப்பத்தூர் மாவட்ட பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகநூல் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சாலையில் வாகனங்களின் கதவை திறக்கும் போது பின்னால் வாகனம் வருகிறதா என்பதை கவனித்து பின் திறக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பதிவை பதிவிட்டுள்ளனர். இது போன்ற விபத்துகள் அடிக்கடி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஷேர் பண்ணுங்க.

News July 8, 2025

வீட்டு வாடகை ஒழுங்குமுறை சட்டம் சொல்வது என்ன? (2/2)

image

தமிழ்நாடு, வீட்டு வாடகை முறைப்படுத்துதலுக்கான புதிய சட்டம் 2017ன் படி ஹவுஸ் ஓனர் குடியிருப்பவர் வீட்டிற்குள் 7 மணிக்குள் அல்லது இரவு எட்டு மணிக்குப் பின்னர் செல்ல கூடாது. மூன்று மாத வாடகையை மட்டுமே முன் பணமாகப் பெற வேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வாடகையை மட்டுமே பெற வேண்டும். வாடகை ஒப்பந்தம் முடியாமல் வீட்டை காலி செய்ய சொல்ல கூடாது. கட்டாயம் ரசிது தர வேண்டும். ஒப்பந்ததை பதிவு செய்ய வேண்டும்.

error: Content is protected !!