News August 20, 2024
நாமக்கல்: 102வது நாளாக தொடரும் போராட்டம்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் வலையப்பட்டி, எண்புதுப்பட்டி, பரளி உள்ளிட்ட சில பகுதிகளில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு 102வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தை சிப்காட் எதிர்ப்பாளர்கள் நடத்தினர். இதில் விவசாய தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Similar News
News November 15, 2025
நாமக்கல்: ஆதார் அட்டையில் திருத்தமா?

நாமக்கல் மக்களே, “ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேற்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News November 15, 2025
நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 93.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 77 டிகிரியாகவும் காணப்படும். காற்று வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வீசும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News November 15, 2025
நாமக்கல் மக்களுக்கு முக்கிய எண்கள் அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் உதவி மையங்களை தொடர்பு கொள்ள நாமக்கல்- 04286-233901, ராசிபுரம் -04287-222840, திருச்செங்கோடு- 04288-253811, சேந்தமங்கலம் – 6282228034, பரமத்தி வேலூர் – 04268-250099, குமாரபாளையம்- 04288-246256 – ஆகிய இலவச சேவை எண்களில் தொடர்பு கொள்ளலாம். SHARE பண்ணுங்க!


