News August 20, 2024
பிறவிப்பிணி போக்கும் திருஏடக நாதர்

சமணர்களை புனல்வாதம் செய்து ஞானசம்பந்தர் வென்ற சைவத்தலம் மதுரை திருவேடகம் ஏடகநாதர் திருக்கோயிலாகும். காசிக்கு இணையான முக்தித்தலமாக குறிப்பிடப்படும் நின்ற சீர் நெடுமாறனால் நிர்மாணிக்கப்பட்ட இத்தலத்துக்கு, பவுர்ணமி நாளில் சென்று, பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, விரதமிருந்து ஏடகேசருக்கு அபிஷேகம், பட்டு வஸ்திரம் சாற்றி, நெய் தீபமேற்றி, தேவாரம் பாடி வணங்கினால், பிறவிப் பிணி நீங்கும் என்பது ஐதீகம்.
Similar News
News March 23, 2026
கூட்டணியில் இல்லையா? அதிமுக அதிர்ச்சி

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியை இணைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருப்பதாகவும், எந்தக் கட்சியுடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைப்போம் எனத் தனது முடிவைக் கூறி அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும், தனித்து போட்டியில்லை எனக் கூறிய அவர், 100 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு தன்னிடம் வேட்பாளர்கள் தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
News March 23, 2026
போரால் அமெரிக்காவுக்கு ₹7,500 கோடி இழப்பு

மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் அமெரிக்காவிற்கு சுமார் ₹7,500 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக BBC மற்றும் CSIS அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. போர் தொடங்கிய முதல் 2 வாரங்களிலேயே ₹75 கோடி இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஜோர்டானில் உள்ள THAAD ரேடார் அமைப்பு அழிக்கப்பட்டதில் மட்டும் ₹4,000 கோடிக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாம்.
News March 23, 2026
அவனவன் ஏதேதோ பேசிட்டு இருக்கான்: துரைமுருகன்

உங்களைப் பொறுத்தவரை 3 முனை போட்டியா, 4 முனை போட்டியா என துரைமுருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தேர்தல் களத்தில்தான் தெரியும்; அவனவன் ஏதேதோ பேசிட்டு இருக்கான் என்று தனது பாணியில் பதிலளித்தார். இந்த தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா என கேட்டதற்கு, தலைவர் கையில்தான் உள்ளது என்றார். முன்னதாக, வயோதிகம் காரணமாக <<19438444>>துரைமுருகனுக்கு <<>>சீட் மறுக்கப்படலாம் என தகவல் வெளியானது.


