News August 20, 2024

இ-சேவை மூலம் கட்டட சுய சான்று

image

இ-சேவை மையங்கள் மூலம் சுய சான்றிதழ் கட்டட அனுமதி வழங்க, அரசு திட்டமிட்டுள்ளது. இணையதளம் மூலம் பொதுமக்களே சுய சான்று அனுமதி பெறலாம். எனினும், ஏதாவது தவறு நடந்துவிடும் என்ற அச்சத்தால், இன்ஜினியர்கள் மூலம் மக்கள் விண்ணப்பம் செய்கின்றனர். அவர்கள் அரசு கட்டணத்தை விட, கூடுதலாக ₹40,000 வரை கேட்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே, 3ம் நபர் தலையீட்டை தடுக்க இ-சேவை மூலம் சான்று வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News August 15, 2025

மலைபோல் குவிந்த வாழ்த்துகளுக்கு ரஜினி நன்றி

image

நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டு கால திரைப்பயணத்தை பறைசாற்றி, திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த CM ஸ்டாலின், EPS, கமல், மோகன்லால், இளையராஜா உள்ளிட்ட அனைவருக்கும் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல் அனைவருக்கும் 79-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News August 15, 2025

முடிவுக்கு வந்த தூய்மை பணியாளர்களின் போராட்டம்!

image

சென்னையில் தூய்மை பணியாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்ததாக அரசு தெரிவித்துள்ளது. <<17403280>>காலை உணவு, பணியின்போது மரணித்தால் ₹10 லட்சம் காப்பீடு<<>>, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அரசின் 6 அறிவிப்புகளுக்கு போராட்ட குழுவினர் CM ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். பணி நிரந்தரம் வேண்டும், தனியார்மயமாக்கல் வேண்டாம் என கடந்த 2 வாரங்களாக தூய்மை பணியாளர்கள் நடத்திய போராட்டம் பேசுபொருளானது கவனிக்கத்தக்கது.

News August 15, 2025

பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

image

✪ரத்தமும் <<17409691>>தண்ணீரும் <<>>ஒன்றாக ஓடாது: சுதந்திர தின விழாவில் PM மோடி ஆவேசம்
✪சென்னை <<17410130>>கோட்டையில் <<>>கொடியேற்றிய CM ஸ்டாலின்
✪கொட்டும் மழையில் <<17411614>>தேசியக் <<>>கொடிக்கு மரியாதை செலுத்திய ராகுல்
✪தொடர்ந்து <<17411085>>சரியும்<<>> தங்கம்: சவரனுக்கு ₹80 குறைவு
✪ஆசியக் கோப்பை: <<17409302>>PAK <<>>மேட்ச்சை புறக்கணிக்க ஹர்பஜன் வலியுறுத்தல்
✪ அரங்கம் அதிரட்டுமே.. முதல் நாளில் ₹140 கோடி வசூலித்த ‘கூலி’

error: Content is protected !!