News August 20, 2024

மேடை பேச்சால் ட்ரோல்கள்: வேதனை தெரிவித்த மிஷ்கின்

image

மேடைகளில் ஒருமையில் பேசுவது; கெட்டவார்த்தையில் திட்டுவது என மிஷ்கினின் அட்ராசிட்டி கொஞ்சம் ஓவராகவே சென்றது. இந்நிலையில், நேற்று வாழை திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த மேடையில்தான் நாகரீகமாக நடந்துருக்கேன். அதனால் ரொம்ப வருத்தத்தோடும், மகிழ்ச்சியோடும் மேடையில் இருந்து இறங்குறேன். எனது வீடியோக்களை அனுப்பி நண்பர்களே திட்டுறாங்க” எனக் கூறினார்.

Similar News

News March 7, 2026

BREAKING மானாமதுரையில் ரவுடி சுட்டுப்பிடிப்பு

image

சிவகங்கை மாவட்டம் கானூர் காட்டுப்பகுதியில் மறைந்திருந்த ரவுடி ஊர்க்காவலன் என்பவரைப் பிடிக்க போலீசார் சென்றனர். அப்போது, அவர் மானாமதுரை இன்ஸ்பெக்டரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தற்காப்பிற்காகவும், அவரைப் பிடிப்பதற்காகவும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் காயமடைந்த ரவுடி ஊர்க்காவலன் தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 7, 2026

தாக்குதல் நடத்தியதற்கு மன்னிப்பு கேட்ட ஈரான்

image

அண்டை நாடுகளை தாக்கியதற்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார். அண்டை நாடுகள் மீது இனி எந்தத் தாக்குதல்களும் நடத்தப்படாது என கூறிய அவர், அண்டை நாடுகளின் நிலப்பரப்பில் இருந்து ஈரானை தாக்கினால் மட்டுமே பதில் தாக்குதல் நடத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், எதிரிகள் ஈரானை பணிய வைக்க முடியாது; அந்த கனவு அவர்களுடனேயே மண்ணுக்குள் போக வேண்டியதுதான் எனவும் கூறியுள்ளார்.

News March 7, 2026

சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

image

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.

error: Content is protected !!