News August 20, 2024

சூறாவளிக்காற்று: மீனவர்களுக்கு எச்சரிக்கை

image

சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என RMC அறிவுறுத்தியுள்ளது. மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், அரபிக்கடல், வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 35 முதல் 45 km வேகத்திலும் இடையிடையே 55 km வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News March 14, 2026

பழம்பெரும் நடிகை மது காலமானார்

image

பழம்பெரும் நடிகை மது மல்ஹோத்ரா(72) காலமானார். 80’ஸ் காலக்கட்டத்தில் பாலிவுட்டில் கொடிகட்டி பறந்த அவரது கண்ணசைவை காணவே தியேட்டர்களுக்கு படையெடுத்த ரசிகர்கள் ஏராளம். அமிதாப் பச்சனின் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள அவர், SATTE PE SATTA, KARZ, VISHWANATH உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News March 14, 2026

விலை மளமளவென குறைந்தது.. 1 கிலோ 8 ரூபாய் மட்டுமே!

image

சிலிண்டர் தட்டுப்பாட்டால் பல ஹோட்டல்கள் மூடப்பட்டதன் எதிரொலியாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் தேக்கமடைந்துள்ளன. இதனால், அவற்றின் விலை சரசரவென குறைந்துள்ளது. தக்காளி 1 கிலோ ₹8 முதல் ₹15 வரையே விற்கப்பட்டு வருகிறது. உருளை(₹15), கேரட்(₹30), புடலங்காய்(₹15), வெண்டை(₹30), அவரை(₹15) விலையும் கணிசமாக குறைந்துள்ளது. திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் காய்கறி விலை சரிந்துள்ளது. உங்க ஊரில் எப்படி?

News March 14, 2026

தொகுதிக்கு ₹5 கோடி செலவு.. தவெக மா.செ.,க்கள் ஷாக்

image

நேற்று புஸ்ஸி ஆனந்த் நடத்திய கூட்டத்தில் தவெக மா.செ-க்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பான தகவல் கசிந்துள்ளது. *ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் செலவுக்கு குறைந்தது ₹5 கோடி தேவைப்படும் *அவ்வளவு பெரிய தொகையை செலவு செய்யக்கூடிய வேட்பாளர்கள் கட்சியில் இல்லை *மக்களுக்கு பரிச்சயமான வேட்பாளர்களை கண்டறிவதில் சிக்கல் என கூறினராம். இதனால் தான் 90% மா.செ.,க்கள் கூட்டணிக்கு செல்லலாம் என தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!