News August 20, 2024
பொய் தகவலை பரப்பாதீர்: வினேஷின் கணவர்

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு பல்வேறு அமைப்புகளிடம் இருந்து ₹16 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு அவரது கணவர் சோம்வீர் ரதி மறுப்பு தெரிவித்துள்ளார். வினேஷ் யாரிடம் இருந்தும் பணம் பெறவில்லை எனவும், மலிவான பிரபலத்திற்காக இந்த பொய்யான தகவல் பரபரப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இது தங்களை மட்டும் காயப்படுத்தாமல் சமூக மதிப்பை பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News March 6, 2026
₹6,769 கோடி வருவாய் ஈட்டிய பாஜக

2024-25 நிதியாண்டில் நன்கொடை மூலம் பாஜக ₹6,769 கோடி வருமானம் ஈட்டியதாக ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம்(ADR) கூறியுள்ளது. 6 தேசிய கட்சிகள் சுமார் ₹7,960 கோடி பெற்ற நிலையில், அதில் பாஜகவிற்கு 85% நன்கொடை கிடைத்துள்ளது. காங்கிரஸ் ₹918 கோடி நன்கொடை பெற்றுள்ளது. வருவாயில் ₹3,774 கோடியை பாஜக செலவழித்துள்ளது. காங்கிரஸ் வருவாயை தவிர்த்து கூடுதலாக ₹193.66 கோடி என மொத்தம் ₹1111.94 கோடி செலவழித்துள்ளது.
News March 6, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 6, மாசி 22 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: த்ரிதியை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்
News March 6, 2026
‘மக்கள் தொகை 2027’ சின்னம் அறிமுகம்

மக்கள் தொகை 2027 பணிகள் ஏப்.1-ல் துவங்கும் நிலையில், அது முற்றிலுமாக டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், இப்பணிக்கான புதிய பிரசார உருவ சின்னங்களையும், ஹவுஸ் லிஸ்டிங் பிளாக் கிரியேட்டர், HLO ஆப், செல்ப் எனுமெரேஷன் போர்டல், சென்செஸ் மேனேஜ்மெண்ட் & மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட 4 அம்சங்களை அமித்ஷா அறிமுகப்படுத்தி வைத்தார். அதன்படி, மக்கள் தங்களது சுயவிவரங்களை ஆன்லைனில் பதிவேற்றலாம்.


