News August 19, 2024
26 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்

சென்னையில் ஒரு வாரத்தில் 26 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. தொடர் குற்றங்களில் கைதான நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதன்படி, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதற்கு கைதாகி சிறையில் இருந்த 26 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் ஓராண்டு சிறையில் இருக்க வேண்டியிருக்கும்.
Similar News
News March 5, 2026
தமிழக அரசியலில் இதுவே முதல்முறை

2026 தேர்தலுக்கு திமுக 21 கட்சிகளுடன் பிரமாண்டமான கூட்டணியை அமைத்துள்ளது. TN அரசியல் வரலாற்றிலேயே ஒரே கூட்டணி, சிந்தாமல் சிதறாமல் மேலும் புதிய கட்சிகளை சேர்த்து 4-வது முறையாக தேர்தலை சந்திப்பது இதுவே முதல் முறை. குறிப்பாக, அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள்கூட(பிரேமலதா, தமிமுன் அன்சாரி, நெல்லை முபாரக், கருணாஸ், தனியரசு உள்ளிட்டோர்) திமுகவுடன் இணைந்துள்ளன.
News March 5, 2026
மக்களுடன் தான் தவெக கூட்டணியா?

காங்., உடன் கைகோர்க்கலாம் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தவெகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். பண்ருட்டி ராமச்சந்திரன், முஸ்தபா ஆகியோர் விஜய்க்கு ஆதரவளித்தாலும், பெரிய கட்சியான காங்., வரும் என்ற நம்பிக்கை சிதைந்துவிட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ‘மக்களுடனே கூட்டணி’ என்ற நிலைப்பாட்டை விஜய் விரைவில் அறிவிப்பார் என கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?
News March 5, 2026
மொத்தமாக ₹8,500 சம்பள உயர்வு.. இன்ப அதிர்ச்சி

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல்துறை ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்து வருகிறார். இதன்படி, <<19299732>>டாஸ்மாக்<<>> ஊழியர்களுக்கு மேலும் ₹1,000 சம்பளம் உயர்வு, பகுதிநேர ஆசிரியர்களுக்கு கூடுதலாக <<19242295>>₹2,500<<>> சம்பளம் உயர்வு, கவுரவ விரிவுரையாளர்களுக்கு ₹5,000 உயர்த்தி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புகளால் அந்தந்த ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிடுகிறார்.


