News August 19, 2024
இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது

இன்றைய காலத்தில் பலருக்கும் அறிகுறிகள் இல்லாமலே திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது. இருப்பினும் ஒரு சில அறிகுறிகளை வைத்து இதை நாம் அறிந்துகொள்ளலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தொடர்ச்சியாக காரணமில்லாத சோர்வு, உடலில் எந்த இயக்கம் இல்லாதபோதும் மூச்சுவிடுவதில் சிரமம், உடலின் மேற்பகுதியில் வலி, வேலை செய்யாமல் இருக்கும்போதும் தொடர்ச்சியாக வியர்ப்பது போன்றவை மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என்கிறார்கள்.
Similar News
News March 11, 2026
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது!

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. ஏப்.6-ம் தேதி வரை நடைபெறவுள்ள இத்தேர்வுகளை 8,82,806 மாணவ, மாணவிகள், 25,801 தனித் தேர்வர்கள், 395 சிறைவாசிகள் என மொத்தமாக 9,09,002 பேர் எழுதவுள்ளனர். தேர்வுப் பணிகளில் 45,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 5,000 பறக்கும் படையினர் ஈடுபடவுள்ளனர். ALL THE BEST STUDENTS
News March 11, 2026
TN-ல் பணியாற்றிய காலம் பொற்காலம்: RN ரவி

மேற்குவங்க கவர்னராக மாற்றப்பட்ட ரவி TN மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கடந்த 54 மாதங்கள், TN மக்களோடு கலந்து பழகி, அவர்களின் அன்பில் திளைத்து, தமிழின் பெருமையிலும் தமிழ் மக்களின் பெருமிதத்திலும் மகிழ்ந்திருந்ததாக கூறிய அவர், இப்போது TN மக்களை விட்டுப் பிரிகிற சூழல் வந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், TN-ல் செலவிட்ட இந்த நாள்கள், தன் வாழ்வின் பொற்கால நாள்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
News March 11, 2026
நள்ளிரவில் திடீர் சந்திப்பு.. அரசியலில் பரபரப்பு மாற்றம்!

தமிழக தேர்தல் களத்தில் இன்னும் கூட்டணி அமைக்காத ராமதாஸ், சசிகலா இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், திமுக, அதிமுக இல்லாத விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்தும், தென்மாவட்டங்களில் சசிகலா தரப்பு, வட மாவட்டங்களில் ராமதாஸ் தரப்பு களமிறங்குவது குறித்தும் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.


