News August 19, 2024

பட்டாசு வெடித்ததில் சிதறிய கைவிரல்கள்

image

திண்டிவனம் அடுத்த சிங்கனூர் கிராமத்தில் நேற்று கனகராஜ் என்பவர் இறந்ததை அடுத்து இன்று அவருக்கு (ஆகஸ்ட் 19) இறுதி ஊர்வலம் நடந்துள்ளது. இந்த ஊர்வலத்தின் போது ஆறுமுகம் (51) என்பவர் பட்டாசு வெடித்துள்ளார். அப்போது அவருடைய கையிலேயே பட்டாசு வெடித்து வலது கை விரல்கள் சிதறியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News August 28, 2025

இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

திண்டிவனம் வட்டம் பிரம்மதேசம் பகுதியில் இன்று(ஆக.29) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

News August 28, 2025

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவமனையின் மருந்தகம் மற்றும் ஆய்வுக் கூடத்தில் ஆய்வு செய்த அவர், நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, இணை இயக்குநர் மரு.ப.லதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News August 28, 2025

விழுப்புரத்தில் ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள்.

image

விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போலீஸார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன், சுமார் 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்கக் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் ஊர்வலம், வருகிற 31-ந்தேதி நடைபெறும்.

error: Content is protected !!