News August 19, 2024
கருணாநிதி நினைவு நாணயத்தின் விலை ₹10,000

கருணாநிதி நினைவு நாணயத்தின் விலை ₹10,000 என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மறைந்த திமுக தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, ₹100 நினைவு நாணயம் நேற்று வெளியிடப்பட்டது. இந்த நாணயம், சென்னையில் உள்ள <<13886599>>அண்ணா<<>> அறிவாலயத்திற்கு வந்துவிட்டதாகக் கூறிய CM, தேவைப்படுவோர், ₹10,000 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News March 13, 2026
தவெக கூட்டணி முடிவில் திடீர் மாற்றமா?

NDA-வில் தவெக இணைய வாய்ப்பிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், உரிய அங்கீகாரம் கிடைத்தால் NDA கூட்டணியில் சேர பெரும்பாலான <<19372536>>மா.செ.,க்கள் பச்சைக் கொடி<<>> காட்டியுள்ளனராம். இதனையடுத்து, விஜய்யின் நெருங்கிய நண்பர் ஒருவர் பாஜக தலைமையிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. NDA-வில் தவெகவுக்கு 45 சீட் கொடுக்க முன்வந்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.
News March 13, 2026
இனி RTI-ல் பொதுத்தேர்வு விடைத்தாளை பெறலாம்!

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களுடைய விடைத்தாள் நகல்களை RTI-ன் கீழ் விண்ணப்பித்து பெறலாம் என மாநில தகவல் ஆணையம் (SIC) தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த SIC, RTI கட்டண விதிகளின்படி பக்கத்திற்கு ₹2 செலுத்தி விடைத்தாள் நகல்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. விடைத்தாள் பராமரிக்கப்படும் அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் பெற்றுக்கொள்ளலாமாம்.
News March 13, 2026
ஈரானின் அணு விஞ்ஞானியை கொன்றுவிட்டோம்: இஸ்ரேல்

ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி ஒருவரை கொன்றுவிட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது ஈரானின் அணு ஆயுத திட்டத்தையும் பலவீனமாக்கியுள்ளதாகவும், ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு குறிப்பிடத்தக்க அடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார். மேலும், இஸ்ரேலை அழிக்கத் துடிக்கும் எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


