News August 19, 2024
பாஜகவுடன் திமுக இணக்கமாக செல்லாது: கே.பாலகிருஷ்ணன்

பாஜகவுடன் இணக்கமாக செல்லும் முடிவை திமுக எடுக்க முடியாது என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். திமுக அரசு செய்யக்கூடிய நல்ல விஷயங்களை ஆதரிப்போம் என்று கூறிய அவர், மக்கள் விரோத அரசின் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்ப்போம் எனவும் தெரிவித்தார். பாஜகவுடன் யார் சென்றாலும் அவர்களை எதிர்க்கிற கூட்டணியில் தான் மார்க்சிஸ்ட் இடம்பெறும் என்றும் கூறினார்.
Similar News
News March 24, 2026
அதிமுக கூட்டணியில் இருந்து விலகினார்

2026 தேர்தலில் தவாகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். வேல்முருகனை சந்தித்த அவர், கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சமீபத்தில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளித்த அவர், திடீரென தவாக பக்கம் தாவியுள்ளார். முன்னதாக, தனது 10 கோரிக்கைகளை ஏற்கும் கூட்டணியில் இடம்பெறுவேன் என வேல்முருகன் கூறியது குறிப்பிடத்தக்கது.
News March 24, 2026
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே அரசு: அன்புமணி

மத்திய அரசை எதிர்த்தால் எதுவும் கிடைக்காது என்று அன்புமணி திமுகவை விமர்சித்துள்ளார். மத்திய அரசும் மாநில அரசும் ஒரே கூட்டணி அமைத்தால் மாநிலத்துக்கு நல்லது என்றும் திமுக மத்திய அரசை எதிர்ப்பதால் தமிழ்நாட்டுக்கு கட்டுமானங்கள், நிதியுதவி உள்ளிட்டவை கிடைக்காது என்றும் கூறியுள்ளார். மேலும், பாஜக, டெல்லியை குறைசொல்வது என்பது பயந்த முதலமைச்சர் மற்றும் திமுகவின் பேச்சு என்று கடுமையாக சாடியுள்ளார்.
News March 24, 2026
திமுகவுக்கு சாதகமாக தேர்தல் அதிகாரிகள்: செல்லூர் ராஜு

தேர்தல் கண்காணிப்பு குழுவில் திமுக தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை நியமித்துள்ளதாக செல்லூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார். எந்த அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்ற பட்டியலை எடுத்து வருவதாகவும், அதை EPS மூலம் ECI-யிடம் கொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கெனவே தேர்தல் விதிமுறைகளை மீறுவதற்கான வாய்ப்பிருப்பதாக மதுரை ஆட்சியர் மற்றும் ஆணையரை இடமாற்றம் செய்யக்கோரி பாஜகவினர் ECI-யிடம் மனு அளித்துள்ளனர்.


