News August 19, 2024
ரகசிய கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: பாஜக

திமுக-பாஜக ரகசிய கூட்டணி என்ற இபிஎஸ் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் அழைப்பின் பேரில், கலைஞர் நாணய வெளியீட்டில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டதாக தெரிவித்த அவர், நாணய வெளியீட்டை அரசியல் கடந்து பார்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதற்கு முன் எம்ஜிஆர், அண்ணா உள்ளிட்டவர்களுக்கும் நாணயம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News March 18, 2026
அதிமுக கூட்டணியில் என்ன நடக்கிறது?

அதிமுகவில் தொகுதி பங்கீட்டுக்கு குழு அமைத்து 4 நாள்கள் ஆகியும் இதுவரை ஒரு கட்சியை கூட அழைத்து பேசவில்லை. கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய உள்ளதாக அதிமுக, பாஜக தலைவர்கள் கூறுகின்றனர். அப்படியே இருந்தாலும் ஏற்கெனவே உள்ள பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளை அழைத்துப் பேசாதது ஏன் என அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த தாமதத்தால் NDA-வில் புகைச்சல் என திமுகவினர் விமர்சிக்கின்றனர்.
News March 18, 2026
வெள்ளி விலை ₹5,000 குறைந்தது!

<<19413476>>தங்கத்தை தொடர்ந்து<<>> வெள்ளி விலையும் இன்று கிலோவுக்கு ₹5,000 குறைந்துள்ளது. இதனால், சென்னையில் சில்லறை விற்பனையில் வெள்ளி கிராம் ₹275-க்கும், பார் வெள்ளி கிலோ ₹2,75,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 2% குறைந்து 1 அவுன்ஸ்(28 கிராம்) 78 டாலர்களுக்கு விற்பனையாகிறது. இது வரும் நாள்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
News March 18, 2026
வடகொரியா தேர்தல்: கிம்முக்கு எதிராக வாக்களித்த மக்கள்!

வடகொரியா நாடாளுமன்ற தேர்தலில், கிம் ஜாங் உன்னின் Workers Party of Korea கூட்டணி கட்சிகள் மொத்தமுள்ள 687 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. இக்கூட்டணிக்கு 99.93% வாக்குகள் கிடைத்துள்ளது. இத்தேர்தலில் பல ஆச்சரியங்கள் உள்ளன. அனைத்து தொகுதிகளில் ஒருவர் மட்டுமே போட்டியிட்டுள்ளனர். மேலும், 1957-ல் இருந்து முதல் முறையாக 0.07% வாக்குகள் கிம் கட்சிக்கு எதிராக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


