News August 19, 2024

இன்று முதல் 5 நாள்களுக்கு கட்டணமில்லா பயிற்சி

image

தமிழக அரசின் கல்வி TVயில், இன்று முதல் 5 நாள்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. TNPSC, போலீஸ், ஆசிரியர், ரயில்வே, BANK போட்டித் தேர்வுகளுக்கு TN Career Services Employment என்ற Youtube சேனலில் பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படுகிறது. இன்று முதல் ஆக.23 வரை நாள்தோறும், 7-9 AM வரை நேரலையிலும், 7-9 PM வரை மறு ஒளிபரப்பும் செய்யப்படும். பிற விவரங்களை <>இந்த<<>> இணையதள முகவரியில் அறியலாம்.

Similar News

News March 17, 2026

இண்டக்‌ஷனை பயன்படுத்த மத்திய அரசு பரிந்துரை

image

LPG சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முடிந்தவரை இண்டக்ஷன் அடுப்புகளைப் பயன்படுத்துமாறு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. நுகர்வோர்கள் முடிந்தவரை LPG பயன்பாட்டைக் குறைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், நகர்புற மக்கள் PNG-க்கு மாற கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், பல இடங்களில் மக்கள் பதற்றம் காரணமாக அவசர அவசரமாக கேஸ் புக் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

News March 17, 2026

விஜய்யுடன் கூட்டணி.. புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பம்

image

புதுச்சேரி அரசியல் களம் கடைசி நேரத்தில் திருப்பத்தை சந்தித்துள்ளது. NR காங்., – பாஜக இடையே தொகுதி பங்கீடு முடிந்துவிட்ட நிலையில், தற்போது கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. லஜகவை கூட்டணியில் சேர்த்தால், தாங்கள் வெளியேறுகிறோம் என ரங்கசாமி போர்க்கொடி தூக்கியுள்ளார். இந்நிலையில், தங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் தவெகவுடன் கூட்டணி அமைப்போம் என NR காங்., பொதுச்செயலாளர் ஜெயபால் அறிவித்துள்ளார்.

News March 17, 2026

14 வயது பள்ளி மாணவி கர்ப்பம்.. வசமாக சிக்கினார்

image

தோளில் புத்தகப் பையை சுமக்க வேண்டிய வயதில், வயிற்றில் குழந்தையை சுமப்பது எத்தகைய கொடுமை? சேலத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் 14 வயது சிறுமி ஒருவருக்கும் அருண் விஜய்(22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இளைஞர் அத்துமீறியதால் அச்சிறுமி இப்போது கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்து அறிந்ததும் அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீஸில் புகாரளித்துள்ளனர். தற்போது அருண் விஜய் கம்பி எண்ணுகிறார். இதெல்லாம் தேவை தானா?

error: Content is protected !!