News August 19, 2024

சுரேஷ் கோபி கேரளாவுக்கு மட்டும் அமைச்சரா? காங்கிரஸ்

image

முல்லைப்பெரியாறு அணை தொடர்பான மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபியின் பேச்சுக்கு, செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். சுரேஷ் கோபி இந்தியாவுக்கு அமைச்சரா அல்லது கேரளாவுக்கு மட்டும் அமைச்சரா என கேள்வி எழுப்பிய அவர், பிரதமர் தலையிட்டு முல்லைப்பெரியாறில் மத்திய அரசின் நிலையை விளக்க வேண்டும் என்றார். முன்னதாக, முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என சுரேஷ் கோபி தெரிவித்திருந்தார்.

Similar News

News March 22, 2026

தாக்குதல்களை நிறுத்துங்கள்.. ஈரானுக்கு 22 நாடுகள் கடிதம்

image

ஹார்முஸ் நீரிணையை உடனடியாகத் திறக்கக் கோரி 22 நாடுகள் ஈரானுக்கு கடிதம் எழுதியுள்ளன. இந்தப் பட்டியலில் UAE, இங்கிலாந்து, பஹ்ரைன், ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் பிற நாடுகள் அடங்கும். வளைகுடாப் பகுதியில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்கள் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். ஈரானின் நடவடிக்கை உலக மக்களை பாதிப்பதாக தெரிவித்துள்ளனர்.

News March 22, 2026

அவர்களே முதலில் தாக்குதலை தொடங்கினார்கள்: ஈரான்

image

PM மோடியுடனான தொலைபேசியில் பேசிய ஈரான் அதிபர் பெஸ்கோவ் நாங்கள் போரை தொடங்கவில்லை என்று கூறியுள்ளார். அணுசக்தி குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோது ​​அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களை நடத்தியதாக கூறினார். அணுசக்தி நடவடிக்கைகளை தடுக்கவே இந்த தாக்குதல்கள் என்ற அமெரிக்காவின் கூற்றையும் அவர் நிராகரித்தார். இந்த போர் முடியவேண்டுமென்றால் தங்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றார்.

News March 22, 2026

கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா?

image

தவெக தனித்து போட்டி என விஜய் அறிவித்துள்ளார். அக்கட்சி எதிர்கொள்ளும் முதல் தேர்தல் என்பதால் அதன் பலம் என்னவென்று யாருக்கும் தெரியாது. கூட்டம், கணிப்புகளை வைத்து வெற்றியை தீர்மானிக்க முடியாது என அரசியல் நோக்கர்கள் மட்டுமல்ல அக்கட்சி நிர்வாகிகளே பேசி வருகின்றனர். சினிமாவில் இருந்து அரசியலில் நுழைந்த நடிகர்கள் விஜயகாந்த், சிரஞ்சீவி ஆகியோரை முன்னுதாரணமாக கூறுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

error: Content is protected !!