News August 19, 2024
வேடசந்தூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே மினுக்கம்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த கருக்காம்பட்டியை சேர்ந்த கார்த்திக் ராஜா(22) மின்சாரம் தாக்கி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேடசந்தூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 10, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். OTP மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக தங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டால் 1930 என்ற உதவி எண்ணை உடனடியாக தொடர்பு கொண்டு புகார் செய்யவும். உங்கள் பணம் மோசடி நபர்களிடமிருந்து மீட்டு தரப்படும். வேறு வகையான சைபர் குற்றத்திற்கு புகார் செய்ய <
News August 9, 2025
திண்டுக்கல்: தங்கத்துடன் இலவச திருமணம் FREE !

திண்டுக்கல்: காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் ரூ.70 ஆயிரம் திட்ட மதிப்பில் (4 கிராம் தங்கம் உட்பட) இலவசமாக குறிப்பிட்ட நாளில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, கோயிலில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கோயில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளும்படி கோயில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழை குடும்பங்களுக்கு பயனடைய SHARE பண்ணுங்க!
News August 9, 2025
திண்டுக்கல்: மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நூறுநாள் வேலைக்கு செல்லும் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் வண்ணம் வருகிற ஆக.12ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து BDO அலுவலகங்களிலும் சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், அனைத்து ஒன்றியங்களிலும் வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.