News August 19, 2024
இடஒதுக்கீட்டில் சாதித்த சேலம் மாணவர்கள்

மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று வெளியிட்டார். இதில், சேலத்தைச் சேர்ந்த காயத்திரி என்ற மாணவி 668 மதிப்பெண்கள் எடுத்து அரசுப் பள்ளியில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 2ஆம் இடம் பிடித்துள்ளார். இவர் சென்னையில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்று வருகிறார். இதே போல், சேலத்தைச் சேர்ந்த மணிசங்கர் என்பவர் 8ஆவது இடத்தை பிடித்துள்ளார். அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 11, 2025
சேலம் நாளை முகாம் நடைபெறும் இடங்கள்

சேலம் நவம்பர் 12 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் 1)அம்மாபேட்டை மண்டலம் நேரு கலையரங்கம் 2)சங்ககிரி சமுதாயக்கூடம் சந்தைப்பேட்டை 3)குருவம்பட்டி ஆனந்த கவுண்டர் திருமண மண்டபம் 4)நங்கவள்ளி சின்ன சோரகை ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் 5)காடையாம்பட்டி எஸ் எஸ் வி ஜமீன் மஹால் நடுப்பட்டி 6)ஓமலூர் கமலம் திருமண மண்டபம் செட்டிப்பட்டி
News November 11, 2025
சேலத்தில் 12 பேர் அதிரடி கைது: ஏன் தெரியுமா?

சேலம் கன்னங்குறிச்சி அடுத்த கோம்பைகாடு பகுதியில் உள்ள அப்பேரல் கிங்டம் ஸ்வெட்டர் தயாரிக்கும் நிறுவனத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த 12 பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில், குடியுரிமை பெறாமல் தங்கியிருந்த ஒரு பெண் உட்பட 12 பேர் கைது செய்தனர்.
News November 11, 2025
சேலம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

இளம் சாதனையாளர் களுக்கான கல்வி உதவித் தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நவம்பர் 15 வரையிலும், கல்வி நிறுவனங்கள் விண்ணப்பங்களை சரிபார்க்க நவம்பர் 25 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி தகவல் தெரிவித்துள்ளார். மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கியுள்ளார்கள்.


