News August 19, 2024

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உதவி

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி இன்று (19.08.2024) வழங்கினார். உடன் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) முகுந்தன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உட்பட பலர் உள்ளனர்.

Similar News

News August 28, 2025

இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

திண்டிவனம் வட்டம் பிரம்மதேசம் பகுதியில் இன்று(ஆக.29) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

News August 28, 2025

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவமனையின் மருந்தகம் மற்றும் ஆய்வுக் கூடத்தில் ஆய்வு செய்த அவர், நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, இணை இயக்குநர் மரு.ப.லதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News August 28, 2025

விழுப்புரத்தில் ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள்.

image

விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போலீஸார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன், சுமார் 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்கக் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் ஊர்வலம், வருகிற 31-ந்தேதி நடைபெறும்.

error: Content is protected !!