News August 19, 2024

சற்றுமுன்: பிரபல ரவுடி என்கவுன்டர்

image

குமரியில் பிரபல ரவுடி செல்வத்தை, போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர். 6 கொலை உட்பட 28 வழக்குகளில் தொடர்புடைய செல்வத்தை பிடிக்க முயற்சி செய்தபோது, போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார். இதனையடுத்து தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தி, அவரை பிடித்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்குப்பின் ரவுடிகள் மீது அடுத்தடுத்து என்கவுன்டர் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 24, 2026

ஈரோடு: இனி லைன் மேனை தேடி அலைய வேண்டாம்!

image

ஈரோடு மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 24, 2026

மக்களை காக்க PM முதலில் தயாரா? CM ஸ்டாலின்

image

மேற்காசியப் போரின் தாக்கங்களில் இருந்து மக்களை காக்க பல முறை வலியுறுத்தியும் மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என CM ஸ்டாலின் கூறியுள்ளார். மக்கள் தயாராக இருக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் PM மோடி பேசியதை விமர்சித்த அவர், மக்களை காக்க நீங்கள் முதலில் தயாரா என கேட்டுள்ளார். மேலும், தயாராக இருக்க வேண்டியது மத்திய அரசா? நாட்டு மக்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 24, 2026

ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள்.. முதலீட்டாளர்கள் நிம்மதி!

image

பெரிய சரிவுக்கு பிறகு பங்குச்சந்தைகள் இன்று சற்று மீண்டுள்ளது. சென்செக்ஸ் 844 புள்ளிகள் உயர்ந்து 73,525 புள்ளிகளிலும், நிஃப்டி 262 புள்ளிகள் உயர்ந்து 22,775 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. நேற்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் வீழ்ச்சியடைந்ததால் முதலீட்டாளர்கள் சுமார் ₹15 லட்சம் கோடியை இழந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!