News August 19, 2024

விருதுநகர் அருகே விபத்தில் இளைஞர்கள் 2 பேர் பலி

image

தேனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, ஜெயபிரகாஷ் இருவரும் சிவகாசி உறவினர் வீட்டு விசேஷத்திற்கு நேற்று(ஆக.,19) பைக்கில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், நத்தம்பட்டி அருகே கட்டப்பட்டு வரும் அர்ச்சுனா நதியின் ஆற்றுப் பாலத்திற்கு தோண்டப்பட்டிருந்த பள்ளத்தை கவனிக்காமல், கரையில் மோதி விழுந்ததில் இருவரும் பலியாகினர். இன்று காலை உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் நத்தம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 13, 2025

ஆக-15 குடியரசு தினமா? – நோட்டீஸால் பரபரப்பு!

image

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதனையடுத்து காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்பிக்குடி ஊராட்சி கோபாலகிருஷ்ணபுரம் பள்ளி வளாகத்தில் ஆகஸ்ட்-15ஐ குடியரசு தினம் எனக் குறிப்பிட்டு கிராம சபைக் கூட்டத்திற்கான துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்ட நிகழ்வு பொது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

News August 13, 2025

சிவகாசியில் மீண்டும் ஒரு கொலை!

image

சிவகாசி: எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த தர்மலிங்கம்(21), கடந்த 3 நாட்களுக்கு முன் மாயமானார். இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் அவரை தேடி வந்த நிலையில் எம்.புதுப்பட்டி காட்டுப்பகுதியில் தர்மலிங்கம் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. போலீசார் உடலை மீட்டு கொலை செய்தவர்களை தேடி வருகின்றனர்.

News August 13, 2025

விருதுநகரில் நாளை(ஆக.14) மறந்துடாதீங்க..!

image

விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் நாளை (ஆக.14) அன்று காலை 10 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இதில் 8-ம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம். ஆர்வமுள்ளவர்கள் உடனே <>இங்கே க்ளிக்<<>> செய்து உங்களது விவரங்களை பதிவு செய்து மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க…

error: Content is protected !!