News August 19, 2024
உணர்ச்சி வசப்பட்டார் ஸ்டாலின்

பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என, திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். EPS போல் ஊர்ந்துசென்று பதவி வாங்கும் அவசியம் DMKக்கு இல்லை என கூறிய அவர், DMK எதிர்த்தாலும், ஆதரித்தாலும் கொள்கையோடு இருக்கும் என, இந்திரா காந்தி கூறியதையும் நினைவுகூர்ந்தார். நமது உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டேன் என அண்ணா மீது ஆணையிட்டு அவர் உணர்ச்சி வசப்பட்டார்.
Similar News
News March 10, 2026
இரவில் அரிசி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

இரவில் வளர்சிதை மாற்றம் குறைவதால், அரிசி சாப்பிட்டால் கொழுப்பு திரட்டலின் காரணமாக உடல் எடை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. அறிவியலாக இதை அணுகுவோம். எடை அதிகரிப்பு என்பது உட்கொள்ளும் கலோரிகளுக்கும், எரிக்கப்படும் கலோரிகளுக்கும் உள்ள சமநிலையை பொறுத்து அமைவதாகும். இரவில் உடலின் செயல்பாடு குறையுமே தவிர, நிற்காது. அதனால், குறைவான கலோரிகளை எடுத்துக் கொள்ள அறிவியல் பூர்வமாக அறிவுறுத்தப்படுகிறது.
News March 10, 2026
விஜய்க்கு அழைப்பு விடுத்த பாஜக நிர்வாகி பதவி நீக்கம்

தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து A.N.S.பிரசாத் நீக்கப்பட்டுள்ளார். NDA-வில் இணையுமாறு விஜய்க்கு கூட்டணி அழைப்பு விடுத்திருந்த நிலையில் அவர் கட்சி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், சட்டமன்ற தேர்தல் மாநில பணிக்குழுவில் அவருக்கு அளிக்கப்பட்ட ஊடகத்துறை பொறுப்பாளர் என்ற பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்படுவதாக நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
News March 10, 2026
ராசி பலன்கள் (10.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


