News August 19, 2024
ஆற்றில் மாயமானவரை மீட்க களமிறங்கிய 50 வீரர்கள்

தாமிரபரணி ஆற்றில் தவறி விழுந்த நபரை மீட்கும் பணி இன்று(ஆக.,19) காலை 6.30 மணியிலிருந்து தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. மாவட்ட அலுவலரின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலையங்களில் இருந்தும் 50 தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தேடும் பணி துரிதமாக நடைபெறுகிறது. மாயமான வாலிபரை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News July 8, 2025
நெல்லை: பாங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு

நெல்லை: பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் உள்ளூர் வங்கி அலுவலர் (Local Bank Officer) பணிக்காக தமிழகத்திற்கு 60 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 24ம் தேதி கடைசி நாளாகும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும். நெல்லையில் தேர்வு நடைபெறுகிறது. விண்ணப்பிக்க இங்கே <
News July 8, 2025
நெல்லை மாநகரில் 21ஆம் தேதி வரை போலீஸ் தடை உத்தரவு

திருநெல்வேலி மாநகரில் இன்று நள்ளிரவு முதல் ஜூலை 21, 2025 வரை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, அனுமதியின்றி பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், தர்ணா, ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது அமைதி மற்றும் மக்கள் நலன் கருதி இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
News July 7, 2025
மாநகர காவல் இரவு ரோந்து பணி அதிகாரிகள் விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (ஜூலை 7) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர், விபரம், காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.