News August 19, 2024
சேலத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

சேலத்தில் மின்பராமரிப்பு காரணமாக நாளை காலை 9 முதல் மதியம் 2 மணிவரை தாரமங்கலம், காடம்பட்டி, சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, அமரகுந்தி, அத்திராம்பட்டி, பவளத்தானூர், அத்திக்காட்டனூர், சவுரியூர், பக்கநாடு, ஆவடத்தூர், ஆடையூர், இருப்பாளி, ஒட்டப்பட்டி குண்டானூர், ஆணைபள்ளம், அடுவாபட்டி, கல்லூரல்காடு, குண்டு மலைகரடு, கன்னியாம்பட்டி, புளியம்பட்டி, ஒருவாபட்டி, மயிலேரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
Similar News
News March 11, 2026
சேலத்தில் அடிதடி தகராறு: 17 பேர் மீது வழக்கு

சேலம் கல்பகனூரில் திருவிழா விளையாட்டுப் போட்டிகளுக்காக ஹரிஷ் ராகவேந்திரா மற்றும் அவரது நண்பர்கள் வசூலில் ஈடுபட்டபோது, அதே பகுதியைச் சேர்ந்த நிதீஷ் குமார் தரப்பினருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது மோதலாக மாறி இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இச்சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி, இரு தரப்பையும் சேர்ந்த 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
News March 11, 2026
சேலம்: எம்எல்ஏ அருள் அதிரடி எச்சரிக்கை!

சேலம் ஓமலூர் கோட்டக்கவுண்டம்பட்டியில் இன்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூடக் கோரி பாமக எம்.எல்.ஏ அருள் வலியுறுத்தியுள்ளார். வரும் மார்ச் 12-ம் தேதிக்குள் கடை மூடப்படாவிட்டால், அன்றைய தினம் காலை 11 மணிக்குத் தாமே நேரில் வந்து கடையைப் பூட்டிப் போராட்டம் நடத்தப்போவதாக அவர் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் கோட்டக்கவுண்டம்பட்டி பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
News March 11, 2026
சேலம்: Spam Calls தொல்லையா?.. இதற்கு இனி END CARD!

சேலம் மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.


