News August 19, 2024
வேலூரில் நாளை மின்தடை

வேலூர் மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. MRF நிறுவனம், தணிகைபோளூர், இச்சிபுத்தூர், உப்புப்பேட்டை, தாஜ்புரா, மேலக்குப்பம், தூப்புகானா, தேவி நகர், அம்மா நகர், விசாரம், நந்தியாலம், ரத்தினகிரி, மேலக்குப்பம், ஆற்காடு, மேல்பாடி, திருவலம், வள்ளிமலை, பூடுதாக்கு, கீழ்மின்னல், பிரம்மாபுரம், பெருமுகை, அரப்பாக்கம், காரணம்புட் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும்.
Similar News
News March 8, 2026
காட்பாடியில் வெல்லப்போவது யார்?

நடைபெறவிருக்கும் தேர்தலில் காட்பாடி தொகுதி அரசியல் கவனம் பெற்றுள்ளது. திமுகவின் கோட்டையாக கருதப்படும் இந்த தொகுதியில்,1996 முதல் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் வெற்றி வாகை சூடி வருகிறார். ஆனால்,கடந்த 2021 தேர்தலில் அதிமுக – திமுக இடையேயான கடும் போட்டிக்கு மத்தியில், 776 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே துரைமுருகன் வென்றார். இந்நிலையில் வரும் தேர்தலில் காட்பாடி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
News March 8, 2026
வேலூரில் அதிரடி கைது

வேலூர்: கே.வி.குப்பம் அடுத்த சென்னங்குப்பம் பகுதியில் கே.வி.குப்பம் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 3 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் கஞ்சா பொட்டலங்களை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட பிரவீன்குமார் (20), திலீப் (26), சந்தோஷ்குமார் (34) ஆகிய 3 பேரை கைது செய்து, 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
News March 8, 2026
வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.


